Local Art



கென்யா - ஓர் அறிமுகம் - கலை

கென்ய கலைகள் அலங்காரமும் அழகும் உள்ள மிக பழமையான வரலாறு கொண்டது. நாடெங்கிலும் குகை மற்றும் பாறை ஓவியங்கள் காண கிடைக்கின்றன. அந்த கலைகளின் தாக்கம் இன்றுள்ள நவீன கலைகளிலும் பிரதிபலிக்கிறது.

பல கென்ய இனங்கள் கலை அலங்காரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவை. அவை உபயோக மற்றும் மத சடங்கு பொருட்களிலும் மனித உடல் அலங்காரங்களிலும் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, குறியா மற்றும் சம்புரு இனங்களில் இந்த கலை சிறந்துள்ளது. குறிப்பாக சம்புரு இனம் போர்வீரர்களின் உடல் அழகு அலங்கார கலையில் உச்சம் தொட்டுள்ளது.

அவர்களின் சிகை அலங்காரங்கள் மற்றும் வண்ண உடல் ஓவியங்கள் அவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி என்ற அர்த்தம் கொண்ட சம்புரு என்ற பெயரை பெற்றுத்தந்துள்ளது.போரான், ஒரோமோ போன்ற பல வடதிசை நாடோடி இனங்கள் அவர்களின் தண்ணீர் குடுவை, இருக்கைகள், தலையணைகளை மிக அழகாக அலங்காரம் செய்கின்றனர். கென்யாவின் கடினமான இயற்கை சூழ்நிலைகளில் வசிக்கும் துர்கானா மக்கள் அவர்களின் நெருப்புக்கோழி முட்டையில் செய்த நீர்க்குடுவைகள், அரிவாள் மற்றும் தடிகைகளில் அலங்காரம் செய்கின்றனர்.

இங்குள்ள வரைவு கலை பற்றி அதிக சரித்திர பதிவுகள் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவமைப்புகள் குகை ஓவியங்களில் இருந்து வந்துள்ளன. கடலோரகலாச்சாரபாதிப்பும் உள்ளது.கென்யாவின் கடலோர பகுதிக்கும் அரேபிய நாடுகளுக்கும் உள்ள கலாச்சார தொடர்பு ஆழமான வேர்களை கொண்டது. அது அவர்களின் ஆடை அணிகலன் வடிவமைப்புகளில்பிரதிபலிக்கின்றது.