About Membership

உறுப்பினர் பதிவு.

தமிழர்களின் நலம் விரும்பும் அனைவருக்கும் தமிழ் பண்பாட்டு மன்றத்தில் உறுப்பினராக தகுதி உள்ளது. உறுப்பினர் சேர்க்கை மன்ற உறுப்பினர் சேர்க்கை குழுவின் தணிக்கைக்குட்பட்டது.

சங்க மேலாண்மை குழு பல விதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தருகிறது. நம் சமூகத்தின் வியாபார தொடர்புகள், நமது சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை வாய்ப்பு போன்றவை முகநூல் மற்றும் வாட்ஸப் குழுக்கள் மூலம் பகிரப்படுகின்றன. உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள், யோகா, விளையாட்டு போட்டிகள் தமிழ் குடும்பங்களுக்கும், பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கும் நடத்தப்படுகின்றன. தமிழ் பள்ளி மிக சிறப்பாக செயல்பட்டு நமது அடுத்த தலைமுறைக்குதமிழை கொண்டு சேர்க்கிறது.

உறுப்பினராக பதிய கீழே தரப்பட்டுள்ள படிவத்தை தரவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை info@tamilkenya.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அல்லது சங்க மேலாண்மை குழு உறுப்பினர்களை அணுகவும்.

உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்குKsh. 1,500. ஆயுட்கால உறுப்பினர் கட்டணம் Ksh. 10,000. தமிழ் பண்பாட்டு மன்றம் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தேர்தெடுக்கப்பட்ட அதன் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றது.