Region

நில அமைப்பு மற்றும் மக்கள்

Kenya is a country rich in wildlife, culture, history, beauty and friendly, welcoming people. Kenya is geographically diverse, from snow-capped mountain peaks to extensive forests to wide-open plains.


Kenya has a population of more than 38 million people, with about four million residing in its capital city, Nairobi. There are 42 ethnic groups who call Kenya home; each group has its own unique language and culture. Although Kikuyu is the largest ethnic group, the Maasai are the most well known due to both their long-preserved culture and their involvement in Kenyan tourism. Kenya is also home to immigrants of other nationalities, including Europeans, Asians, Arabs and Somalis. Kenya's official languages are English and Swahili.

Kenya continues to make a place for itself on the world stage, its abundant agricultural and natural resources, educated manpower, diverse yet cohesive population and vision for the future will see it emerge as a leader among African nations.

இயற்கை பேரழகு மிக்க கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யா, வன விலங்குகள் செறிந்து வாழும் இடமாக உள்ளது. கென்யா, கலாச்சாரமும், அன்பும் கொண்ட மக்களை கொண்டுள்ளது. கென்யா, பனி சிகரங்களும், அடர்ந்த காடுகளும், முடிவில்லா புல்வெளிகளும் பாலை நிலமும் கொண்டு புவியியல் ரீதியாக பரந்த நாடு.

கென்யாவின் கிரேட் ரிப்ட் பள்ளத்தாக்கு, அமைதியடைந்த எரிமலைகளும், சுடுநீர் ஊற்றுகளும் கொண்டு இயற்கை வனப்புடன் உள்ளது. கென்யாவின் கடலோரங்கள், பேரழகு கொண்ட கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் அமையப்பெற்றது. மேலும், இங்கு சுற்றுலாதுறை கட்டுமானங்கள் உலகத்தரத்தில் சிறந்துள்ளது. எனவே, கென்யா உலகத்தின் மிகசிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை தன்னை நோக்கி இழுப்பதும் வியப்பில்லை.

கென்யாவின் மக்கள்தொகை 4 கோடி ஆகும். அதில் 40 லட்சம் மக்கள் தலைநகரான நைரோபியில் வசிக்கின்றனர். கென்யா, 42 விதமான உள்நாட்டு இன மக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு இனமும், தனக்கேயுரிய மொழியும் கலாச்சாரமும் கொண்டது. கிக்குயு இனம் பெரிய இனமாக இருந்தாலும், மசாய் இனம் அதன் செறிந்த கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையில்அதன் பங்களிப்பு காரணமாக உலகளாவிய அறிமுகம் பெற்றுள்ளது.

மேலும், இங்கு குடியேறியவர்களான ஆங்கிலேயர்கள், இந்தியர் உள்ளிட்ட ஆசியர்கள், அரபு மற்றும் சோமாலி நாட்டவர் மக்களோடு இணைந்து வசிக்கின்றனர்.

ஆங்கிலமும் ஸ்வாஹிலியும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளாகும்.

கென்யா, அதன் இயற்கை வளங்கள், விவசாயம், படிப்பறிவுள்ள வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்கள் ஆகியவற்றால் எதிர்காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தின் தலைசிறந்த நாடாகும் என்பதில் ஐயமில்லை.